ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்ப்பா பகுதியில் மலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம், மழை தொடர்வதால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை நெருங்க கூட முடியாமல் போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜர் பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரும் பயணித்துள்ளார். இவருடைய நிலை குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.