தென்காசி மாவட்டத்தில் இருக்கும் சொக்கம்பட்டி கிராமம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு அவர்களது குடும்பத்தினருக்கு தல 2 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.