கேரளாவில் சமீபத்தில் மருத்துவ மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு மருத்துவ மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்து அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருபுறம் மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்த மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்றால் மறுபுறம் நீட் தேர்வுக்காக பயிற்சி பெறும் மாணவர்களும் இப்படி ஒரு விபரீதமான முடிவு எடுக்கிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ கோகுலம் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருடம் எம்பிபிஎஸ் படித்து வந்த அதிதி என்ற  22 வயதான இவர் அந்த கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கு துணையாக அவருடைய தாயாரும் தங்கி இருந்துள்ளார் . இந்த நிலையில் விடுதியில் இருந்து தன்னுடைய புத்தகங்கள் சிலவற்றை எடுப்பதற்காக அதிதி தன்னோட விடுதி அறைக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென்று அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. மனஅழுத்தம் அவருடைய விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.