‘கில்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பிரான்ஸ், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸில் திரையிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். திரையரங்கில் இந்தக் கொண்டாட்டம் எல்லை மீறியதன் காரணமாகச் சிலரைப் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.