தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 9) புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடத்திய மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியதை, புதுச்சேரி மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி போனில் கேட்டு ரசித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
விஜய்யின் உரையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது, தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவது குறித்த மத்திய அரசு மீதான கோரிக்கைகள் மற்றும் திமுக மீதான விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. புதுச்சேரி அரசியலில் புதிய வரவாக உள்ள விஜய்யின் பேச்சுக்கு முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்த இந்தச் செயல், அரசியல் அரங்கில் சில எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தவெக தலைவர் விஜய் பேச்சை, செல்போனில் உன்னிப்பாக கவனித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி #TVK | #TVKVijay | #TVKCampaign | #Campaign | #TVKVijaySpeech | #BussyNAnand | #NirmalKumar | #AadhavArjuna | #Puducherry | #PuducherryCampaign pic.twitter.com/lnHSIVgaCK
— Thanthi TV (@ThanthiTV) December 9, 2025
“>
