நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவனை அழைத்து வந்து சாகசம் செய்ய வைப்பதாக கூறி ஓடுகளை தீ எரியும் கையால் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவனின் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி லைட்டரில் தீப்பற்ற வைத்த உடன் கையில் தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.