சேலத்தில் நேற்று (பிப்.13) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞர், கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த சூரஜின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

​”எங்கள் குடும்பத்தைக் காக்கத் தலைவர் விஜய் தான் உதவி செய்ய வேண்டும். இதுவரை தவெக தரப்பில் இருந்து எந்தவொரு நிர்வாகியும் எங்களை நேரில் வந்து சந்திக்கவில்லை, ஆறுதல் கூட சொல்லவில்லை” என அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். ஒரு தொண்டனின் உயிரிழப்பில் கட்சி நிர்வாகிகளின் இத்தகைய மெத்தனப் போக்கு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த சூரஜின் மறைவுக்குப் பொறுப்பேற்று, விஜய் உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.