
தமிழகத்தில் விஜய் கட்சி தொடங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், அண்ணன் மட்டும்தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று விஜய் நினைப்பார்.
நல்ல ஆட்சி நல்ல அரசை உருவாக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள் மற்றும் 20 பெண் பிள்ளைகளை நிறுத்துகின்றோம். தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட எந்த தீய திட்டத்திற்கும் நேரடியாக சென்று பார்த்தால் அதில் கருணாநிதியின் பெயர் தான் இருக்கும். அநாகரிக அரசியலின் ஆரம்ப புள்ளியே அதுதான் என்ற சீமான் கூறியுள்ளார்.