நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கும் வேலையில் மும்முரம் காட்டி வருகிறார். இதற்காக பிப்.4ஆம் தேதி டெல்லி செல்லும் நிர்வாகிகள், கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளனர். இந்த நிலையில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக செயலி ஒன்றை விஜய் மக்கள் இயக்கம் உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது