தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் கடந்த மூன்று வருடங்களாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வருடமும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கல்வி விருது விழா நடைபெற்ற நிலையில் இன்று இறுதி கட்ட கல்வி விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்நிலையில் நடிகர் விஜய்யை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் இப்படி கூத்தாடியை ஒரு கிராம் தங்கத்துக்காக கட்டிப்பிடிக்க அனுமதிக்க கூடாது என விமர்சித்திருந்தார். அதுமட்டுமின்றி இது தமிழனுக்கு அழகா.? இதுதான் தமிழ் கலாச்சாரமா என மோசமான வார்த்தைகளில் விமர்சித்து இருந்ததால் அவர் சர்ச்சையில் சிக்கினார்.

இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விழாவில் கலந்து கொண்ட ஒரு மாணவி பதிலடி கொடுத்திருந்தார். அதாவது நாங்கள் நடிகர் விஜய்யை எங்களுடைய அப்பாவாக அண்ணனாக பார்க்கிறோம். ஒரு அப்பா மகளை தொடுவதை இப்படித்தான் தப்பா பேசுவீங்களா. விஜய் எங்களுடைய உயிர். எனவே இனி இப்படி தப்பா பேசாதீங்க எனக் கூறியிருந்தார்.

“>

இதேபோன்று இன்று நடைபெற்ற விழாவிலும் ஒரு மாணவியின் தாய் வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, ஒத்த சீட்டுக்காக அலையும் சிலர் நடிகர் விஜயின் மாணவர்கள் சந்திப்பு குறித்து பேசக்கூடாது. விஜய் என் பிள்ளைகளுக்கு தாய் மாமன் உறவு போல. தாய்க்கு இல்லாத உரிமை கூட தாய்மாமனுக்கு இருக்கிறது. ஆனால் சிலர் தற்குறித்தனமாக பேசி வருகிறார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது என்று கூறினார். மேலும் இந்த வீடியோவை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.