
எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போல அரசியல் விஜய் எடுபடுவாரா எடுபட மாட்டாரா? என்று சொல்வதற்கு நான் என்ன ஜோசியரா? என்று பிரேமலதா ஆவேசமாக பேசியுள்ளார்.
விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பது குறித்து நீங்கள் விஜய்யிடம் போய் கேட்க வேண்டும். நாங்கள் 20 வருஷ கட்சி. இந்த கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது. இந்த கேள்வி எல்லாம் விஜய்யிடம் போய் கேளுங்கள். ஏற்கனவே நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
அதனால் எங்களுடைய திட்டங்கள் எல்லாமே கொள்கை ரீதியாக சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போல அரசியல் விஜய் எடுபடுவாரா? எடுபட மாட்டாரா? என்று சொல்வதற்கு நான் என்ன ஜோசியரா? அதெல்லாம் நான் சொல்ல முடியாது. அவருடைய அடுத்த கட்ட நகர்வு செயல்பாடு பொறுத்து தான் அரசியலும் இருக்கும்” என்று பேசியுள்ளார்.