தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு அரசியல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக வெற்றிக்கழகம் கட்சி உடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி கிடையாது. அவர் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து தனது கொள்கையை பிரகடனப்படுத்துகின்றார். எங்கள் கட்சியின் கொள்கையை நாங்கள் பிரகடனப்படுத்துகின்றோம் அவ்வளவுதான். அவர் வேலையை அவர் பார்க்கிறார், எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம் என்று ஜெயக்குமார் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.