தமிழக அரசியலில் நடிகர் விஜயின் அரசியல் முயற்சியையும், பாஜக கூட்டணியில் அவரை இணைத்துக்கொள்ளும் சூழல் உருவாகுமா என்பதையும் சுற்றி பல ஊகங்கள் வலம் வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், நடிகர் விஜயுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் எங்கள் வேத வாக்கு. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதன்படியே நாங்களும் நடக்கிறோம்” எனக் கூறினார்.
மேலும், தேசியத் தலைமையின் முடிவுகளே மாநிலத்தில் பாஜகவின் நடவடிக்கைகளையும் எதிர்கால கூட்டணி அமைப்புகளையும் தீர்மானிக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த பதில், நடிகர் விஜயுடன் பாஜகவுக்கு எதிர்காலத்தில் கூட்டணி வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கான அரசியல் அனுமானங்களை அதிகரித்துள்ளது.
