
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விஜயின் தொடக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. விஜயின் முதல் மாநாடு அவருடைய முதல் பட ஓப்பனிங் போன்ற சிறப்பாக இருந்தது. சங்கரின் இந்தியன் 2 படம் போன்று விஜயின் முதல் மாநாடு மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருப்பதால் விஜயுடன் அதிமுக கைகோர்க்க இன்னும் பல காலங்கள் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் நாங்கள் அதிமுகவில் இருக்க வேண்டிய அவசியமே கிடையாது நாங்களும் போய் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொள்ளலாம் என்றார்.
மேலும் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். குறிப்பாக திராவிட மாடல் என்று சொல்லி மக்களை மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாகவும் குடும்ப அரசியல் செய்யும் அந்த கட்சிதான் நம்முடைய முதல் எதிரி என்றும் விஜய் திமுகவை சாடி பேசினார். அதே சமயத்தில் அவர் அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கூட்டணியிலும் பங்கு தருவதாக அவர் கூறியதால் தற்போது விஜய் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தான் அப்படி பேசியதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.