
உலகில் மனிதர்கள் உயிர் வாழ அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக தண்ணீர் இருக்கிறது. ஆனால் வசதி படைத்தவர்கள் மத்தியில் ஆடம்பர தண்ணீர் பயன்பாடு என்பது உருவாகி வருகிறது. அந்த வகையில் மிகவும் விசேஷமான ஒரு பாட்டிலில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை லட்சக்கணக்கில் செலவு செய்து வசதி படைத்தவர்கள் வாங்குகிறார்கள். அதாவது ஜப்பான் நாட்டில் பிலிக்கோ ஜுவல்லரி வாட்டர் என்ற நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் மிகவும் ஆடம்பரமான பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1,16,000 ஆகும். இந்த குடிநீரில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பது பார்ப்போம். அதாவது அந்நாட்டில் உள்ள கோபே என்ற இயற்கை நீரூற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் தான் அதில் நிரப்பப்படுகிறது. அதன் பிறகு அந்த பாட்டில் ஸ்வரோவ்ஸ்கி கற்களால் உருவாக்கப்படுகிறது. அதோடு தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளுடன் பாட்டில் உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த ஆடம்பரமான பாட்டிலோடு தூய்மையான குடிநீரும் விற்பனை செய்யப்படுவதால் வசதி படைத்தவர்கள் அதன் விலையை பொருட்படுத்தாமல் வாங்குகிறார்கள்.