தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி வரும் நிலையில் 38 மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கும் நிலையில், ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில் இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தனர். மேலும் அதன்படி தற்போது பயர் சாங் பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.