
அதிமுகவில் ஜெயலலிதா இருக்கும்போது இருந்தே பணி செய்தவர் மருது அழகராஜ். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டதால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இந்த நிலையில் மருது அழகுராஜ் சமீப காலமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை புகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட 2026 ஆம் ஆண்டு விஜய் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்று கூறியிருந்தார். இதேபோன்று தற்போதும் விஜயை புகழ்ந்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார்.
அதாவது நேற்று பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின்இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்ற நிலையில் அதை தொடர்ந்து தற்போது இந்த பதிவை மருது அழகுராஜ் போட்டுள்ளார். அதில் சபாஷ் விஜய். விக்கிரவாண்டியில் விதைத்தது, பரந்தூரில் வெடித்தது, பூஞ்சேரியில் பூத்தது, நாளை பூக்களில் யூத்களாய் காய்த்து அது புனித ஜார்ஜ் கோட்டையில் கனியட்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் தொல்லிணக்க தத்துவத்தை பொய்க்காது காக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் விரைவில் மருது அழகு ராஜ் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டியில்
விதைத்ததுபரந்தூரில்
வெடித்ததுபூஞ்சேரியில்
பூத்ததுநாளை
பூத்-களில்
யூத்-களாய்
காய்த்துஅது புனிதஜார்ஜ்
கோட்டையில் கனியட்டும்..பழையன
கழிதலும்
புதியன புகுதலும்
என்னும்தொல்லிணக்கன
தத்துவத்தை
பொய்க்காது
காக்கட்டும்.. pic.twitter.com/6RvbmFqmrG— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) February 27, 2025