
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இருந்து வருபவர்கள் தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர். தொலைக்காட்சியில் முதலில் விஜே -வாக பணியாற்றி வந்த மகாலட்சுமி அதன் பிறகு சீரியலில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் பலரும் இவர்களின் திருமணத்தை கிண்டல் அடித்து வந்த நிலையில் இதைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் மகிழ்ச்சியாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை போட்டு தனது காதல் மனைவியோடு எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க