ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை வரும்போது, சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சில வீடியோக்கள் வைரலாகி மக்களின் உற்சாகத்தை அதிகரிக்கின்றன. நிறைவான வண்ணங்களும், உற்சாகமான பாடல்களும், மகிழ்ச்சியில் தோய்ந்த மக்களின் கொண்டாட்டங்களும் அடங்கிய வீடியோக்கள், ஹோலியின் உண்மையான ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, பிரபலமான திரைப்பட காட்சிகள், பாரம்பரிய ஹோலி விழாக்களின் காட்சிகள் மற்றும் பிரபலங்களின் ஹோளி கொண்டாட்ட வீடியோக்கள் ஒவ்வொரு ஆண்டும் மறுபடியும் மீண்டும் பகிரப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

அந்த வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களுக்கு ஒருவர் ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கும் வாழ்த்து கூறிவிட்டு இளைஞர்கள் உற்சாகமாக அங்கிருந்து புறப்பட தயாராகின்றனர். அப்போது வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த நபர் மீது மோதி விடுகிறார். இதனால் இருவருமே கீழே விழுந்து எழுந்தனர். அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டுள்ளது.