சீனாவில் நடந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 10 சென்டிமீட்டர் நீளமான வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கருவின் தவறான வளர்ச்சி, மரபணு குறைபாடுகள் மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இது போன்ற அபூர்வ குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தையின் வால் நரம்புகளுடன் இணைந்து இருப்பதால் அதனை அகற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.