கர்நாடக மாநிலத்தில் எம்எல்ஏவாக இருப்பவர் எச்.டி ரேவண்ணா. அவருடைய மனைவி பவானி ரேவண்ணா. இவர்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முன்னாள் எம்பி ஆன பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச பட வழக்கு மற்றும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய சகோதரர் சூரஜ் ரேவண்ணாவும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை காரில் கடத்தியதாக அவருடைய தந்தை எச்.டி ரேவண்ணா மீது குற்றம் சுமத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்ட ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

இதேபோன்று அவருடைய மனைவி பவானியும் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்நிலையில் தற்போது எம்.எல்.ஏ சூரஜ் மீது சேத்தன் என்ற வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் ஓரினச்சேர்க்கை புகார் கொடுத்துள்ளார். அதாவது அவரிடம் வேலை கேட்டு சென்றபோது தன்னை மிரட்டி ரூ.5 கோடி பணம் கேட்டதாகவும் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சேத்தேன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்போது சூரஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.