சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பா.ஜ.க ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களைப் புனிதர்களாகக் காட்ட முயல்வதாகவும், உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுடன்தான் அவர்கள் கைகோர்த்துள்ளார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

இந்தி திணிப்பை ஏற்காத காரணத்தால் தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், களத்தில் தங்களை எதிர்க்க முடியாதவர்களே வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாகக் கூறினார்.

மேலும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கொள்கையற்ற ஒரு துரோகக் கூட்டணி என்றும் அவர் தனது உரையில் சாடினார்.