
மத்திய பட்ஜெட்டில் சமீபத்தில் சுங்கவரி குறைக்கப்பட்ட நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது. அதன்படி 22 கேரட் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் குறைந்து 6,415 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் ஒரு கிராம் வெள்ளி பத்து காசுகள் குறைந்து 88.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 88 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.