நல்ல ஆசிரியர்கள் வெறும் பாடம் மட்டும் சொல்லிக்கொடுப்பதில்லை, வாழ்க்கையையே மாற்றுகிறார்கள். 2003-2004 காலக்கட்டத்தில் ஐந்தாம் வகுப்பு படித்த ஒரு மாணவர், 22 வருடங்களுக்குப் பிறகு தனது ஆசிரியருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த மாணவரின் குடும்பச் சூழல் அப்போது மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. வீட்டில் பாதுகாப்பற்ற உணர்வோடு இருந்த அந்தப் பையனுக்கு, ஆசிரியரின் அன்பான அணுகுமுறையும் ஊக்கமளிக்கும் பேச்சும் தான் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. “அன்று நீங்கள் கொடுத்த அந்தப் பாதுகாப்பு உணர்வைச் சொல்ல எனக்கு 22 வருஷம் ஆகிடுச்சு” எனத் தனது மனக்குமுறலை அதில் கொட்டியுள்ளார் அந்த மாணவர்.
[OC] Finally emailed a teacher I’d been thinking about for years
byu/sillygoosetime0264 inMadeMeSmile
இந்த மின்னஞ்சலைப் பார்த்த அந்த ஆசிரியர் கொடுத்த பதில் தான் இன்னும் ஸ்பெஷல்! அந்த மாணவருக்குப் பதில் அனுப்பிய ஆசிரியர், “உன்னைக் கவனித்துக்கொள்வது எனக்கு மிகவும் எளிதான ஒன்றாகவே இருந்தது” என்று மிக எளிமையாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, அந்த மாணவன் ஒரு சுமையாகத் தெரியவில்லை, ஒரு ஆசிரியராக அவனை அரவணைப்பது அவருக்கு இயல்பாகவே வந்திருக்கிறது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து எமோஷனல் ஆகி வருகின்றனர். உண்மையான அன்புக்கும் அர்ப்பணிப்புக்கும் காலம் ஒரு தடையே இல்லை
