உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் இந்த மாதம் மீண்டும் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தங்கள் செய்திகள் மறைந்து விட வேண்டும் என்று விரும்பும் பயனர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் அனுப்பும் செய்திகள் காணாமல் போக வேண்டும் என செட் செய்யப்பட்டாலும் இந்த வசதியால் நாம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த கேப்ட் மெசேஜஸ் வசதி சிறந்த பாதுகாப்பு வசதியாகும்.

வாட்ஸ் அப் குழு சார்ட்டில் உள்ள ஒருவர் காணாமல் போன செய்தியை வைத்திருக்கும் போது அந்த செய்தியை அனுப்புபவருக்கு தெரிவிக்கப்படும் எனவும் அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அது முடியும் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் டைமர் காலாவதியாகும் போது செய்தி தானாகவே நீக்கப்படும். ஆனால் மறைந்து போகும் செய்திகளை நீங்கள் சேமித்தால் அவை புக் மார்க் இகானுடன் லேபுலிடப்படும். சாட் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட kept messages அம்சத்தில் இந்த மெசேஜ்களை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.