உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் களை பகிரும் வகையிலான புதிய அப்டேட்டை WABeta அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சத்தில் உங்கள் தொடர்பு எண் வைத்துள்ள குறிப்பிட்ட நபர் உங்களுடைய பெயரை அவரது ஸ்டேட்டஸில் குறிப்பிட்டால் போதும். அதை உங்களால் பகிர முடியுமாம். எனவே நீங்கள் விரும்பும் பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ அல்லது அனுப்பி சொல்லி கேட்கவோ தேவை ஏற்படாது.