உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் ட்ரான்ஸ் மெசேஜ் என்ற புதிய அம்சம் விரைவில் வர உள்ளது.

இதன் மூலமாக நமது சாட்டுகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கலாம். இது கூகுள் லைவ் ட்ரான்ஸ்லேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவதாகவும் நமது சாட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை இயக்க நீங்கள் மொழி பேக்கை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.