இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு வீட்டுக் கடன் சலுகை நாளையுடன் முடிவடைகிறது.

இதன் ஒரு பகுதியாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் வட்டி விகிதங்கள் சாதாரண வட்டி விகிதங்களை விட குறைவாக உள்ளன. நல்ல CIBIL மதிப்பெண் பெற்றவர்களுக்கு இந்த சலுகையில் 15 முதல் 30 அடிப்படை புள்ளிகள் வரை தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், கிரெடிட் ஸ்கோர் 700க்கு கீழ் உள்ளவர்களுக்கு வட்டி விகிதங்களில் குறைப்பு இல்லை.