இந்தியாவில் இந்த வருடம் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, ராஜஸ்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு புது புது வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

அந்தவகையில் மத்திய பிரதேச அரசு பெண்களுக்கான புதிய நலத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி ஏழை பெண்கள் ஒவ்வொருவருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘லட்லி பஹினா திட்டம்’ என்கிற இந்த திட்டத்தை அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுசன் தெரிவித்துள்ளார். இந்த திடத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ.60,000 கோடி செலவிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.