இந்தியாவின் முக்கியத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், மற்றும் வி.ஐ. (வோடபோன்-ஐடியா) ஆகியவை வரும் டிசம்பர் மாதம் முதல் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதில், அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி சேவைகளுக்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால், தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கட்டண உயர்வு குறித்துக் கவலை தெரிவித்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் ஒரு சுமையாக இருக்கும்.