மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு மதிய உணவு காகிதத்தில் (Paper) வைத்து வழங்கப்பட்ட வீடியோவைப் பார்த்து, தன் இதயமே நொறுங்கிப் போனதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ‘X’  பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நாட்டின் எதிர்காலமாக இருக்கும் அப்பாவிக் குழந்தைகள், அவர்களுக்கு ஒரு மரியாதையான தட்டு கூடக் கிடைக்கவில்லை என்றால், அது வேதனை அளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகள்கூட திருடப்பட்டுள்ளன” என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “அவர்களின் ‘வளர்ச்சி’ வெறும் மாயை, ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான ரகசியம் ‘முறைமை’ (System)” என்றும் அவர் விமர்சித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை இவ்வளவு மோசமான நிலையில் வளர்க்கும் முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு அவமானம் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

“>