
மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்