வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தேர்தலில் வாக்களிக்க முடியும். அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மருத்துவ காப்பீட்டு அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை  போன்ற 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்து வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் வாக்காளர் பெயர் பட்டியலில் உங்களது பெயர் இடம் பெற்று இருக்க வேண்டியது அவசியம்.