ராஜ்யசபா எம்.பி.யாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெற்றார். 1991 – 96ஆம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்த இவர், தாராள மயமாக்கல் கொள்கையை அறிமுகம் செய்தார். 2004 – 2014ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை பிரதமராக இருந்த இவர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், குழந்தை கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.