ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். முதலில் ஐடியை உருவாக்கி தொலைபேசி எண்ணை உள்ளிட்டு ஓடிபி மூலமாக உள்நுழைய வேண்டும்.

இப்போது  Register as New Voter-Form 6  என்பதை கிளிக் செய்து தொடர்புடைய விவரங்களை உள்ளிடவும். முகவரி சான்றிதலுக்காக ஆதார் அட்டையை பதிவேற்றிய பிறகு அந்த தகவல் சரியானதா என சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு விண்ணப்ப ஐடியை பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் நிலையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.