கார் கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீடு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடகா குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போர்வெல்கள் வரண்டுவிட்ட சூழ்நிலையில் தனியார் டேங்கரில் விற்பனை செய்யப்படும் தண்ணீரின் விலை மும்மடங்காக உயர்ந்துள்ளதால் அம்மாநில அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.