தமிழகத்தின் சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக போக்குவரத்து துறை பல சட்டங்களை அமல்படுத்தி பின்பற்றி வருகிறது. அதனை மீறும் வாகன ஓட்டிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அபராதமும் வசூல் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

போக்குவரத்து சட்டத்தின் படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. இவ்வாறு மது அருந்தி வாகனத்தை இயக்கும் போது அந்த நபர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் அவருடன் வாகனத்தில் பயணிக்கும் நபரும் அபராதம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அபராதம் செலுத்தாவிட்டால் அந்த நபரின் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்கள் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.