நாடு முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 13,020காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி சிஷா விதான் கவுன்சில் செயல்படுகின்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,188 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகள் என இரண்டு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்த காலி பணியிடங்களில் விண்ணப்பிக்க ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் உள்ளிட்ட மொழி பாடத்திற்கு விண்ணப்பிக்க மொழி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகவும் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.tsvc.in /application.php என்ற இணையதளம் மூலம் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.