தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலைக்காக தேர்வெழுதும் இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் IAS, IPS, TNPSC நடத்தும் குரூப் 1 ஆகிய தேர்வுகளில் முதன்மை தேர்வு எழுதும் SC,ST மாணவர்களுக்கு பயிற்சி கட்டணமாக ஒவ்வொருவருக்கும் 50,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பொருளாதார நிலை காரணமாக மாணவர்களால் போதுமான பயிற்சி பெற முடியாத நிலை உள்ளதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக SC, ST நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 73 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.