
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இந்நிலையில் PayTm நிறுவனத்தின் Fastag அட்டைகள் வைத்திருப்போர் உடனடியாக மாற்றிக் கொள்ளும்படி நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி பேடிஎம் நிறுவனத்தின் பாஸ்டேக் கார்டுகள் மார்ச் 15ஆம் தேதிக்கு பின்னர் செயல்படாது. ஆகவே, நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் சிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனை தவிர்க்க உடனடியாக வேறு நிறுவனத்தின் பாஸ்டேக் கார்டுகளுக்கு மாறுங்கள்.