சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படிச் சென்னை மெரினா, தியாகராய நகர் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உட்பட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததோடு குறைந்த அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் வாகன ஓட்டிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த டெண்டர் விடும் வரை வாகன ஓட்டிகள் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரவுடிகளை வைத்து மிரட்டி யாராவது சிலர் பணம் கேட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களை‌ நிறுத்தினால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.