இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் காப்பீடு எடுத்திருப்பார்கள். அதன் அவசியத்தை உணர்ந்தோ அல்லது அறியாமல் கூட பலரும் அந்த காப்பீட்டை புதுப்பித்து வருகிறார்கள். அதாவது இருசக்கர வாகனம் எனப்படும் பைக்குக்கு காப்பீடு என்பது ஒரு பொறுப்பான இரு சக்கர வாகன உரிமையாளர் வைத்திருக்க வேண்டிய முக்கியமான அம்சம். இதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது காப்பீடு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படாவிட்டாலும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது சாலையில் விபத்துக்கள் நேரிடும் பொழுது நிதி மற்றும் சட்ட சிக்கல்களில் இருந்து ஒருவரை காப்பாற்றும் ஒரு ஆயுதம்.

காப்பீடு இல்லாமல் விபத்தில் சிக்கிய ஒரு வாகனத்தை பழுது பார்ப்பதற்கு அல்லது விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவை ஈடு செய்வதற்கு நாமே நிதி பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆனால் காப்பீடு எடுத்திருந்தால் விபத்தில் சிக்கிய வாகனத்தின் செலவோடு உடலில் ஏற்படும் காயங்களுக்கும் நிதி பாதுகாப்பு வழங்கப்படும். எனவே வாகன ஓட்டிகள் கட்டாயம் காப்பீடு இருப்பதை உறுதி செய்வது ஒருவரை சட்டரீதியாக பாதுகாப்பதோடு அவர் ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு தீங்கிற்கும் அவரே பொறுப்பென்றாலும் பண இழப்பீடுக்கு அவர் பொறுப்பல்ல என்பது நிம்மதியை கொடுக்கும்.