இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. EPFO ஒருபோதும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அதன் உறுப்பினர்களிடமிருந்து தனிப்பட்ட விவரங்கள் அல்லது எந்த தகவல்களையும் கேட்பதில்லை என்று தெரிவித்துள்ளது.

அதனால் யாரிடமும் எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது. யாராவது உங்களிடம் தனிப்பட்ட தகவல்களை கேட்டால் உடனடியாக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு இது குறித்து புகார் அளிக்கலாம். தகவல்களைக் கேட்கும் கோடிய அழைப்புகள் மற்றும் செய்திகளில் இருந்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. EPFO ஹெல்ப்லைன் எண் 14470 அழைப்பதன் மூலமாக EPFO கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து பிஎஃப், ஓய்வூதியம் திட்டங்கள் பற்றிய தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.