தமிழகத்தின் தலைநகரமும் பெருமையின் அடையாளமுமாகத் திகழும் சென்னை நகரம் உருவான தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் “சென்னை நாள்” கொண்டாட்டங்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நாளைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக முதல்வர் விஜய் சென்னை மக்களுக்குத் தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய ‘சென்னை நாள்’ நல்வாழ்த்துகள்” என மிகவும் உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பாரம்பரியப் பண்பாட்டு அடையாளங்களையும் நாம் அனைவரும் பாதுகாப்போம் எனக் குறிப்பிட்ட அவர், நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரமான சீர்மிகு பெருநகரமாகச் சென்னையை மேலும் உயர்த்துவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம்,… pic.twitter.com/8CNCLndNO9
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2026
சென்னையின் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தும் வகையில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இந்த ‘சென்னை நாள்’ வாழ்த்துச் செய்தி, சென்னை மக்களிடையேயும் சோசியல் மீடியாவிலும் தற்போது வைரலாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
