திமுகவில் கட்சிப் பதவிகளுக்கு இனி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக மூத்த தலைவருமான ஐ.பெரியசாமி மிகவும் கூலாகப் பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது கையில் வைத்திருந்த கடலையைச் சாப்பிட்டவாறே பேசிய அவர், “எங்களுக்குக் கீழே இருக்கும் இளைஞர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு எப்பொழுதுமே நல்ல முடிவுதான். இதைப் பற்றிப் பேசி நாங்களெல்லாம் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று மிகவும் இயல்பாகப் பதிலளித்தார்.
திமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில் சில புதிய கட்டுப்பாடுகளும், பதவிகளுக்கான வயது வரம்புகளும் கொண்டு வரப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இதனால் மூத்த நிர்வாகிகள் பலர் அப்செட்டில் இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதை முற்றிலுமாக மறுக்கும் வகையில் ஐ.பெரியசாமியின் இந்தப் பதில் அமைந்துள்ளது.
"எங்களுக்கு கீழ இருக்கவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்ல.. தலைவர் முடிவு நல்ல முடிவு"…
திமுகவில் பதவிகளுக்கு இனி வயது வரம்பு குறித்த கேள்விக்கு கடலை சாப்பிட்டவாறே கூலாக பதிலளித்த ஐ.பெரியசாமி#DMK | #AnnaArivalayam | #IPeriyasamy | #MKStalin | #PolimerNews pic.twitter.com/KkXSNM9pxt
— Polimer News (@polimernews) August 22, 2026
மூத்த தலைவர்கள் பதவிகளை விட்டுத்தரத் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில், கடலையைக் கொறித்துக்கொண்டே அவர் அளித்த இந்த நக்கலான மற்றும் கூலான பதில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
