இந்தியாவில் 2023-24 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இப்பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூபாய்.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புது வரி முறையில் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.

அதே சமயம் வருமான வரி ரிபேட் அம்சம் மூலமாகவும் மக்கள் பயன்பெறுவார்கள். ரிபேட் அம்சம் எனில் ஒரு நிதி ஆண்டில் வருமான வரித்துறைக்கு செலுத்தவேண்டிய தொகையை விட அதிகமாக நீங்கள் வரி செலுத்தும்போது அதை திரும்ப பெரும் முறையாகும். இப்போது வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டு இருப்பதால வருமான வரி ரிபேட் வாயிலாக ஏராளமான மக்கள் வரி தள்ளுபடி பெற வாய்ப்புண்டு.