நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது வரை யுபிஐ சேவை இலவசமாக இருப்பதால், அதற்காக வங்கிகளுக்கும், செயலிகளுக்கும் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.