தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் நாடு முழுவதும் தற்போது பெரும்பாலான இடங்களில் யுபிஐ மூலம் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். அதன்படி கூகுள் பே, போன் பே உட்பட பல செயலிகள் பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள உதவுகிறது. இந்த சூழலில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் PhonePeல் புதிதாக ‘Income Tax Payment’  என்ற வருமான வரி செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI மற்றும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தொழில்முனைவோர் மற்றும் பணியாளர்கள் சுய மதிப்பீடு செய்து முன்கூட்டியே வரி செலுத்துவதற்கு இது உதவுகிறது. உள்நுழைவு பிரச்சனைகள் இல்லாமல் பணம் செலுத்துவது எளிதாக இருக்கும். இதற்காக PayMate பி2பி நிறுவனத்துடன் PhonePe ஒப்பந்தம் செய்துள்ளது.  இதன் மூலம் பயனர்கள் வரி மட்டும் செலுத்த முடியும். வருமானவரி தாக்கல் செய்ய முடியாது.