
பிரேசில் நாட்டில் சுமார் 400 ஆண்டுகளாக சல்வதோர் பகுதியில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவானது கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த ஊராடங்கினால் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதால் சர்வதேர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வருடாந்திர விழாவில் கலந்து கொள்வதற்காக கூடி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் விதவிதமான ஆடைகள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு மாற்று பாலினத்தவர்கள் தங்கள் ஜோடியுடன் விழாவில் கலந்து கொண்டு கொண்டாடி வருகின்றனர். இதில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது “கடந்த இரண்டு வருடத்திற்கு பின்பு அனைவரையும் இந்த விழாவில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளனர்.