
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜுனூர் மாவட்டத்தில் கிராட்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு 18 வயது இளம்பெண் தன்னுடைய வருங்கால கணவர் கண்முன்னே 6 பேரால் கூட்டு பாளியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாம் தேதி அந்தப் பெண் தன்னுடைய வருங்கால மாப்பிள்ளை பிரின்ட்ஸ் குமாருடன் ஒரு பண்ணையில் நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நிதின், லாவிஷ், பாலி, ஆஷூ, ராபின் ஸ்மித் ஆகிய 6 பேர் அங்கு சென்றுள்ளனர்.
`அவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்தவுடன் இதைப்பற்றி வெளியே கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அந்தப் பெண் பயத்தில் 3 நாட்களாக வெளியில் எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில் பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.